கட்டடத்திற்கோ அல்லது வீட்டிற்கோ நீர்க்காப்பு செய்யும்போது அதற்குரிய வழிவகைகளை தெரிவு செய்வதில் மிக அவதானம் வேண்டும்.
இதன் போது இரசாயனங்களின் விலை செயற்திறன் உத்திரவாதம் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கட்டங்களில் நீர்காப்பு செய்வதற்குரிய சில வழிமுறைகளான
Sealant,cement coating,
liners,membranes
காணப்படுகின்றது
கட்டடங்களின் வெளிப்புற தள மார்பிள் மேற்பகுதிகள்,தண்ணீர் வழிந்து செல்லக்கூடிய இடங்கள்,வளைவான மேற்பகுதிகள் போன்றவற்கு
Sealant தூரிகை/ரோலர் போன்ற உபகரணங்கள் மூலம் பயன்படுத்த முடியும்
Cement coating
கொங்கிரிட் மேற்தளங்களின் நீர்க்கசிவினை தடுத்தல்,தளத்தின் மீது சீமேந்து தன்மையுடைய திரவநிலை ரசாயனம் bursh மூலம் பூசப்படுதல்,இந்த முறையினை கிடையான மேற் தளங்கள் /குளியலறைகள்/ தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறன.
liners
நீர்காப்பு liners பொதுவாக அடித்தளங்கள் அத்திவாரங்கள், மேற்தளத்தில் கொங்கிரீட் போடும் போது இவை உபயோகப்படுகின்றன,liners பொலித்தீன் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களால் ஆனது,மேற்பரப்பில் நுழையும் தண்ணீரை இடையில் தடையை உருவாக்குவதே இதன் செயற்பாடாகும்,பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இதன் உபயோகம் சரியான வழியில் நீர்காப்புக்குரிய தீர்வினை தருவதில்லை
membranes
மேற்தளங்களில் தோட்டங்கள் பூச்செடிகள் வளர்ப்பவர்கள் இந்த செயல்முறையில் செய்வது மிக சிறந்ததாக காணப்படுகிறது,
நீர்காப்பு இரசனங்களில் மிக முக்கியமான செயல்முறை இதுவாகும்.
இவை ரப்பர் தாள்களால் ஆனவை ஒட்டும் தன்மை கொண்டவை
மேற்பரப்புகளில் இதனை விரித்து நெருப்பின் மூலம் சூடாக்கி உருக்கி ஒட்டுதல் ஆகும்.
எனவே மேலே குறிப்பிட்ட நமக்கு பொருத்தமான செயன்முறையை தெரிவு செய்து கொள்வதன் மூலம் water proofing இல் சிறந்த பயனை பெற்றுக் கொள்ள முடியும்.



