கட்டுமான துறையில் நீர்க்காப்பு வேலைகளை (water proofing) ஆரம்பத்திலே செய்யாமல் விடுவதனால் ஏற்படும் விளைவுகளும் வீண் பணவிரயங்களும்
கட்டுமான துறையில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாக நீர்காப்பு செயல்முறை (water proofing) காணப்படுகிறது. நீர்க்காப்பு செயல்முறை என்பது வீடு அல்லது கட்டடங்களில் நீர் ஊடுருவதை தடுக்க செய்யப்படும் இரசாயன பூச்சு செயல்முறை ஆகும்
கட்டுமான துறையால் நிறுவப்படும் ஒரு கட்டடத்தின் ஆயுளை ( water proofing) தீர்மானிக்கின்றது. உலக வெப்பநிலை மாற்றத்தினால் வானிலை மாற்றத்தின் போதும் கட்டடங்களில் கசிவுகள் ஏற்படுவதுண்டு புதிய ஒரு கட்டிடத்தினை கட்டும்போதே நீர்க்காப்பு பிரச்சினைகளை இனங்கண்டு அதற்குரிய ரசாயனங்களைக் கொண்டு சீர் செய்தால் சிறிது காலத்திற்குப் பிறகு ஏற்படப்போகும் தேவையற்ற பழுது பார்ப்புகள் மற்றும் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதை தவிர்த்துக் கொள்ள முடியும்
ஒரு கட்டடத்தின் சுவரிலோ அல்லது தளங்களிலோ நீர் கசிவிக்குரிய அடையாளங்களாக நீர் சொட்டுதல் ஊறி இருத்தல் போன்றன தென்பட்டால் தளத்தில் உள்ள கம்பிகளுக்குள் தண்ணீர் ஊறி துருப்பிடிக்க துவங்கி விடும். இதனால் கட்டடத்தின் தளம் வலுவிழக்க ஆரம்பிக்கும்
ஒரு கட்டடத்தில் அத்திவாரம் முதல் கூரை வரை நீர்காப்பு அத்தியாசியமான தேவையாக காணப்படுகிறது
கட்டுமானத்தில் (water proofing) உபயோகிக்கும் இடங்கள்
1. அத்திவாரம்
2. வெளிச்சுவர்
3.கூரை
4. குளியலறைகள்
5.மேற்தளம்
6.தண்ணீர்தொட்டி
இவ்வளவு இடங்களும் ஒரு கட்டுமானத்தை நீர்க்கசிவு பிரச்சனையால் மெல்ல மெல்ல அழித்து விடும். நேரடியாக தண்ணீரில் பாதிப்பிற்கு உள்ளாகும் இவ் இடங்களுக்கு (water proofing) செய்து கட்டிடத்தின் ஆயுளையும் இஸ்திர தன்மையும் கூட்டி கொள்வதே நன்றாகும்
தரம் குறைந்த வேறு பொருட்களைக் கொண்டு நீர்க்கசினை சீர் செய்வதால் மீண்டும் பிரச்சனை குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாயம் வரக்கூடும். இக்கால பொருளாதார நெருக்கடியில் வீண் செலவினங்களை தவிர்த்து தரம்மிக்க ரசாயனங்களை உபயோகித்து நீர்க்கசிவினை சீர் செய்து கொள்வதே மிகச் சிறந்து



